ஆளுமையும் மற்றும் அளவிடலும்
ஆளுமையும் அளவிடலும்
1. ஆளுமை என்பது ஆதாரப்பண்பு, மேற்பரப்புப் பண்பு
ஆகியவற்றைக் கொண்டது என வலியுறுத்தியவர் காட்டல்
2. தன்வரலாற்று முறை என்பது ஆளுமையை அளவிடும் முறை அல்ல
3. மனப்போராட்டம் விளைவாக ஒருவரிடம் ஆளுமைச் சிதைவு எனும் ஆளுமைக் கோளாறு ஏற்படுகிறது
4. ஆளுமையை நிர்ணயிக்கின்ற சுரப்பிகள் : நாளமில்லாச் சுரப்பிகள்
5. பொருளறிவு இணைத்தறி சோதனையில் பயன்படுத்தப்படும் அட்டைகளின் எண்ணிக்கை 30
6. மைத்தடச் சோதனையில் 10 அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன
7, ஆளுமைக் கோளாறு என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு சந்தேக புத்தி
8. தீவிரமான மனநோய்களுக்கு மருத்துவ உதவியோடு சிகிச்சையளிப்பவர் மனநல மருத்துவர்.
9. மனதின் முக்கியமான பகுதி : நனவிலி நிலை
10. அட்ரீனல் சுரப்பிகள் அமைந்துள்ள இடம் சிறுநீரகங்களுக்கு மேல்
11. நனவுநிலை, இடைமனநிலை, நனவிலிநிலை இம்மூன்றும் மனத்தில் அடங்கும்.
12. பர்ஸோனா ( PERSONA ) என்ற சொல்லுக்குப் பொருள் நடிகரின் முகமூடி
13. லிபிடோ ( LIBIDO ) எனப்படுவது பாலியல் சக்தி
14. சூப்பர் ஈகோ : குழந்தைப்பருவ வயதில் எழத் தொடங்குகிறது
15. சூப்பர் ஈகோ ( SUPER EGO ) : மேல்நிலை மனம்
16. ஈகோ ( EGO ) எனப்படுவது நனவுநிலை மனம்.
17. இட் ( ID) எனப்படுவது அடிநிலை மனம்
18. " பர்ஸனாலிட்டி" (PERSONALITY) என்ற ஆளுமைச் சொல் இலத்தீன் மொழியிலிருந்து பிறந்தது
19. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம் : மூளையின் அடிப்பகுதி
20. ஆளுமையை விவரித்தலில் ஆர். பி.கேட்டல்( R B KETTAL) என்பவரது அணுகுமுறைகளில் ஒன்று, " உளப்பண்பு" கூறுகள் அடிப்படையிலான ஆளுமை வகைப்பாடு கொள்கை.
21. DAT மூலம் நாட்டத்தை அளவிடலாம்
22. TAT மூலம் ஆளுமையை அளவிடலாம்
23. " ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பே ஆளுமை" எனக் கூறிய உளவியல் அறிஞர் கில்போர்டு
24. ஒருவரின் சீரான மற்றும் தனிப்பட்ட நடத்தை முறையைக் குறிப்பது ஆளுமை
25. ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறத்தெறி முறை கதை முடித்தல் முறை.
26. ஆளுமையை அளவிட உதவும் ஒரு அகவய முறை சுயசரிதை முறை
27. ஆளுமையை அளவிட உதவும் உரு புறவய முறை: தர அளவுகோல்
28. மனிதனுள் தேங்கிக் கிடக்கும் வெறுப்பு, கோபம் போன்றவை தாங்கமுடியாத கட்டத்தில் வெடித்துச் சிதறும் நோய் : ஹிஸ்டிரியா
29. அகவய தூண்டல்களால் பெரிதும் உந்தப்படுபவர் அகமுகர்
30. புறவய தூண்டல்களால் பெரிதும் உந்தப்படுபவர் புறமுகர்
31. MMPI ஆளுமையுடன் தொடர்புடையது
32. பொருளறி இணைத்தறி சோதனை, ஆளுமையை அளந்தறியப் பயன்படும்
33. பொருளறி இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் : மர்ரே
34. மைத்தடச் சோதனை, ஆளுமையை அளந்தறியப் பயன்படும்
35. மைத்தடச் சோதனையை உருவாக்கியவர் ஹெர்மன் ரொர்சர்
36. " ஆளுமையானது இட் ( Id ), ஈகோ( Ego ), சூப்பர் ஈகோ( Super Ego ), என மூன்றும் சேர்ந்த மனமாகும் " என்று கூறியவர் பிராய்டு
37. ஆளுமையின் வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு
38. ஆளுமையின் வகைப்பாட்டுக் கொள்கையை ஆதரித்தவர் ஷெல்டன்
39. மனிதர்களின் ஆளுமையை அகமுகர், புறமுகர், நரம்பு தன்மை நோய் உடையவர், கடுமையான சித்தக் கோளாறு நோய் உடையவர் என நான்கு வகையாக பிரித்தவர் எய்ஸன்க்
40. பருமனுடல், கட்டுடல், நீருடல் என்ற மூன்று வகை உட்வகைகளைக் கொண்டு ஆளுமைப் பண்புகளை வகைப்படுத்தியவர் ஷெல்டன்
41. உள பகுப்பாய்வு கோட்பாட்டினை உருவாக்கியவர் பிராய்டு